வடக்கின் கல்வி அமைச்சராக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் நியமனம்

வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சராக
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் பொறுப்பேற்றிருந்த கல்வி அமைச்சின் பதவி
தற்காலிகமாக மாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனிடம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இரவு நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் உறுப்பினர்களின் பரிந்துரையுடன் குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்குரிய பதவி முதலமைச்சரிடமுள்ள  நிலையில், தனது பொறுப்பின் கீழுள்ள மகளிர் விவகார அமைச்சு மற்றும் பெண்கள் சார்ந்த திணைக்கள பொறுப்புகளை மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனிடம் கையளித்தார்.

குறித்த இரு உறுப்பினர்களும் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு கடமையாற்றும் வகையில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளையதினம் வடக்கு ஆளுநர் றெயினோல்ட் கூரே  முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.