புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணைகள் தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
இந்த நிலையில் முதலாம் நாள் விசாரணைகள் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றிருந்ததுடன், யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் இரண்டாம் நாளான இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
அந்த வகையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது அரச தரப்பின் முக்கிய சாட்சியம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஐந்தாவது சாட்சி அரச தரப்பு சாட்சியாக வாக்கு மூலம் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்றையதினம் பிரதி சட்டமா அதிபர் டபிள்யூ.டி.லிபேரா கொலை தொடர்பான முக்கிய தகவல்களை யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.