வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனிக் கட்சி ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
இது தொடர்பில் எமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன அவருக்குக் கடிவாளம் போடவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்தி ரன் தெரிவித்தார்.
பருத்தித்துறையிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில், கட்சி ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தனிக் கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் பல மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டங்க ளில் பங்கேற்றுள்ளார். வடக்கு மாகாணத்துக் கான புதிய அமைச்சரவை நியமிப்பது தொடர்பிலும் இதன்போது பேசியுள்ளார்.
புதிய அமைச்சரவைக்கு நியமிக்கத் திட்டமிட்டிருந்த நான்கு பேரில் ஒருவரே எமக்கு மேற்படி தகவல்களை வழங்கியிருந்தார்.
இதனடிப்படை யில் முதலமைச்ச ருக்குக் கடிவாளம் போடுவதற்காகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது.
இன்னும் இரு வாரங்களுக்குள் புதிய அரசமைப்புக் கான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு விடும் எமது கட்சியின் சார்பில் இ.ஆனோல்ட்டை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்குப் பரிந்துரைத்துள்ளோம்.
முதலமைச்சர் எமது கட்சியின் விருப்புக்கு மாறாக அமைச்சர்களை நியமித்தால், நாம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. மக்களுக்கு உண்மைகளைத் தெரியப்படுத்து வோம் – என்றார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் அரசுக் கட்சி ஆதரவாளர்கள், தமது கட்சி விடயங்களை வெளிப்படுத்தும் பத்திரிகை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். விரைவில் கட்சிப் பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.