வடமாகாண புதிய அமைச்சர்களாக அனந்தியும் சர்வேஸ்வரனும் நியமனம்

வட மாகாகாண கல்வி அமைச்சராக ஈழமக்கள் புரட்சிகர முன்னணியைச் சேர்ந்த க.சர்வேஸ்வரனும், மகளிர் விவகார, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்னடுள்ளனர்.

வடமாகாண புதிய அமைச்சர்களாக க.சர்வேஸ்வரன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் 3 மாதங்களுக்கு தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை விசாரணை செய்ய என முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு கல்வி அமைச்சர் மற்றும், விவசாய அமைச்சர் ஆகியோரை பதவி விலக பரிந்துரை செய்திருந்தது.

அதனை அடுத்து குறித்த இரு அமைச்சர்களையும் பதவியை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கேட்டதற்கிணங்க கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

அந்த நிலைமையில் கந்தையா சர்வேஷ்வரனை625.0.560.350.160.300.053.800.668.160.90 (3) மாகாண கல்வி அமைச்சராகவும், திருமதி அனந்தி சசிதரனை மகளீர் விவகார , கூட்டுறவு அமைச்சராக தற்காலிகமாக 3 மாதங்களுக்கு முதலமைச்சர் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரையில் முதலமைச்சரின் இல்லத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கிய 14 உறுப்பினர்களை சந்தித்து பேசியிருந்தார். அத்துடன் விவசாய நீர்ப்பாசன அமைச்சினை முதலமைச்சர் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நாளைய தினம் இருவரும் தமது அமைச்சு பொறுப்புக்களை வடமாகாண ஆளுநர் முன்பாக ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.