விநாயகர் வழிபாட்டினால் கிடைக்கும் 21 விதமான பேறுகள் :
1. தர்மம்,
2. பொருள்,
3. இன்பம்,
4. செளபாக்கியம்,
5. கல்வி,
6. பெருந்தன்மை,
7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,
8. முக லக்ஷணம்,
9. வீரம்,
10. வெற்றி,
11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல்,
12. நல்ல சந்ததி,
13. நல்ல குடும்பம்,
14. நுண்ணறிவு,
15. நற்புகழ்,
16. சோகம் இல்லாமை,
17. அசுபங்கள் அகலும்,
18. வாக்கு சித்தி,
19. சாந்தம்,
20. பில்லி சூனியம் நீங்குதல்,
21. அடக்கம்,
விநாயகப்பெருமானையே தங்கள் வழிபாடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது.
அகத்திய முனி மூலம் காவிரி தந்தமையும், நம்பியாண்டார் நம்பி மூலம் அப்பர், சம்பந்தர், திருநாவுக்கரசர் – மூவர் தேவாரங்களை உலகுக்கு கொடுத்து சைவ சமயத்தையேகாப்பாற்றிய பெருமையும், யாவரும் அறிந்ததே.
இன்னும் எண்ணிலடங்காத அற்புதங்களையும் நிகழ்த்தி வரும் விநாயகப்பெருமான் தனது பக்தர்களுக்கு அருள்பாலித்துவரும் கருணைத் திறன் அளவிடற்கரியது.
விநாயகப்பெருமான் திருத்தாள் பணிந்து அவர் அருளாலே அவன் தாள் வணங்கி உய்வோமாக.