அசைவ உணவுகளில் ஒன்றான இறைச்சி செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுப்பதால், அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.
தேன் vs இறைச்சி
சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த காம்பினேஷனை ஆயுர்வேதத்தில் ‘ஆம விஷம்’ என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முள்ளங்கி vs இறைச்சி
வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.
கிழங்கு வகைகள் vs இறைச்சி
பொதுவாகவே, மண்ணுக்கு அடியில் விளையும் உணவுப்பொருட்கள் உண்பதை பெரும்பாலும் தவிர்ப்போம்.
கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இந்த காம்பினேஷன் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும்.
உளுந்து vs இறைச்சி
கறுப்பு உளுந்துடன் இறைச்சியைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.
பயறு vs இறைச்சி
முளைகட்டிய பயறு மற்றும் இறைச்சியில் புரதம் அதிக அளவு உள்ளது. உடல் இயக்கத்துக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம் என்றபோதிலும் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் மூட்டுவலி ஏற்படும். இது உடலில் மதமதப்பை ஏற்படுத்தி உற்சாகத்தை இழக்கச்செய்யும்.
கீரை vs இறைச்சி
இறைச்சியுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.