ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் ஹிட்டான பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. நடிகர் கணேஷ் வெங்கட்ராம் உட்பட 15 பிரபலங்கள் வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் ஒரு வீட்டில் இருக்க வேண்டும்.
கணேஷ் வெங்கட்ராமன் மனைவியான நடிகை நிஷா கிருஷ்ணன் தலையணை பூக்கள் என்ற டிவி சீரியலில் நடித்து வருகிறார். அவர் தன் கணவரை பிரிந்து இருப்பது பற்றி உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரிவு வலியை தந்தாலும். மீணடும் உன்னை காணவுள்ள நாளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.