பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார் வையாபுரி… அவரே சொன்ன காரணம்

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

நூறு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் நமீதா, வையாபுரி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, சக்தி உட்பட 15 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த 15 பிரபலங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஜுலி என்ற பெண்ணும் உள்ளார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூன்றாவது நாளில் வையாபுரி அழுதுள்ளாராம். இதை பார்த்து அங்கிருக்கும் பிரபலங்கள் சிலரும் அழுதுள்ளனர்.

வையாபுரி  குழந்தைகள் மற்றும் குடும்பங்களை பிரிந்து இருப்பதை தன்னால் தாங்க முடியவில்லை. அதனால் அவர்களை நினைத்து அழுவதாக கூறியுள்ளார்.

இதற்கு அருகில் இருந்த நடிகர் கஞ்சாகருப்பு மற்றும் கவிஞர் சினேகன் போன்றோர் ஆறுதல் கூறியுள்ளனர்.

இதனால் அங்கு என்ன தான் நடந்தது என்பது குறித்து அறிய இந்நிகழ்ச்சியை பார்க்கும் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.