நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வீதியில் நடனமாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது.
நாமல் ராஜபக்ச அண்மையில் நிகழ்வு ஒன்றிக்கு சென்றுள்ளார். அதன்போது காவடி வாத்தியக்குழு ஒன்றுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக நடனமாடி உள்ளார்.
குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவிவருவதோடு பல்வேறு விதமான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
தந்தை ஆட்சிக் கவிழ்ப்பிலும், மகன் வீதியில் குத்தாட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொதுமக்களோடு இணைந்து பல்வேறுவிதமான செயற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.