அரசுக்கு எதிராகக் கடுமையாகப் போராட மஹிந்த அணி திட்டம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நிறைவடைவதையடுத்து அரசுக்கு எதிரான கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க மஹிந்த அணியான பொது எதிரணியினர் திட்டமிட்டிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றுது.

இதற்கான கலந்துரையாடல்கள் பொது எதிரணியின் உயர்மட்டத்தில் இப்போது நடந்து வருகின்றது என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களது எதிர்ப்புப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் அமோக ஆதரவு கிடைத்திருக்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.