மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தம் தொடர்பில் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சருடன் நேற்று நடத்திய பேச்சுகள் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து தங்களது வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுவதாக தபால்துறை தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் சிந்திக்க பண்டார தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
எவ்வாறாயினும் தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் குழு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வுகளை வழங்குமானால் தங்களது வேலைநிறுத்தத்தைக் கைவிடத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புராதனப் பெருமை வாய்ந்த மூன்று தபாலகங்களையும் அரசுக்கு வருமானம் ஈட்டக்கூடிய வகையில் மாற்றியமைப்பதில் தவறில்லை என்ற அமைச்சரின் நிலைப்பாட்டை ஒருபோதும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், அரசுக்கு வருமானத்தைக் கொண்டுவரக்கூடிய எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது புராதன சொத்துகளில் கைவைப்பதை அனுமதிக்கமுடியாது எனவும் சிந்திக்க பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.