வெளிநாட்டு கடவுச்சீட்டையும் மாற்றி இடத்துக்கிடம் மறைந்து திரியும், சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க தொடர்பான தகவல்கள் சிவப்பு அறிவிப்பு மூலம் பொலிஸாரால் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை கைது செய்ய நிதி குற்றவியல் பிரிவு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை கேட்டுள்ளது.
மிக் விமான கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பாரிய நிதி் மோசடி தொடர்பாக நிதி குற்றப் பிரிவுக்கு தேவையாகவுள்ள உதயங்க வீரதுங்க விசாரணைகளுக்கு சமுகமளிக்காமல் இந்நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக நிதி குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.
அவர் பதுங்கி இருக்கக்கூடுமென சந்தேகப்படும் இடங்களை பல தடவைகள் சர்வதேச பொலிஸார் பரிசீலித்த போதும் அவர் அவ்விடங்களை விட்டு தப்பியோடியுள்ளதோடு வெளிநாட்டு கடவுச்சீட்டையும் மாற்றி இடத்துக்கிடம் மறைந்து திரிவதாகப் பொலிஸார் கூறினர்.
சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள உதயங்க தொடர்பான தகவல்கள் சிவப்பு அறிவிப்பு மூலம் பொலிஸாரால் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேவேளை நிதி குற்றப் பிரிவு மூலம் விசாரிக்கப்படும் பல நிதி மோசடி தொடர்பாக எண்பத்திரண்டு நாடுகளிடம் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
இந்த நிதி மோசடி ரூபாக்களில் கணக்கிட்டால் நூறு கோடி ரூபாய்களுக்கும் அதிகமென நிதி குற்றப்பிரிவு கூறுகின்றது.
இம்மோசடி தொடர்பான தகவல்களை அந்நாடுகள் வழங்கி விசாரணைக்கு பெரும் ஒத்துழைப்பு வழங்குவதாக நிதிக் குற்றப்பிரிவு கூறுகின்றது.
அந்நாடுகள் எண்பத்திரண்டு தூதுவராலய காரியாலயங்கள் மூலமாக தகவல்களை வழங்குகின்றன.