வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி : ஒரு கிலோவிற்கு 5 ரூபா வரி

வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்ய முழு அளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக எல்லையற்ற அடிப்படையில் அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் அடிப்படையில் அரிசியை விற்பனை செய்ய அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்காக 5 ரூபா வரி அறவீடு செய்யப்பட உள்ளது.

அரசாங்கத்தின் வாழ்க்கைச் செலவு கமிட்டியின் தீர்மானத்திற்கு அமைய அரசாங்கமும் ஒரு இலட்சம் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக விலைமனுக்களை கோரியுள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையிலான அரிசிகளும் பொரளை மருத்துவ விஞ்ஞான ஆய்வு கூடத்திலும், சுங்கத் திணைக்களத்தினாலும் விசேட ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் பதியூதீன் குறிப்பிட்டுள்ளார்.