இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் எந்தளவிற்கு முடியாதவராக இருந்தாலும் கூட பதவியேற்பு நடைபெறும் வேளையில் எழுந்து நின்று அதற்கான உரிய மரியாதையை தர வேண்டும்.
ஆனால் தற்போதைய வடமாகாண முதலமைச்சரும், முன்னாள் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்றைய பதவியேற்பு நடைபெற்ற போது ஆசனத்திலிருந்து எழும்பாமல் அமர்ந்திருந்தது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை அரசியலமைப்பை அவமதிக்கும் வகையில் அவர் இன்றைய தினம் நடந்து கொண்டதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்திருந்தன.
வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக அனந்தி சசிதரன் மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் இன்று காலை ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றிருந்தனர்.
இதன்போது, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இரு அமைச்சர்களும் தமது பதவியினை ஏற்றுக்கொள்ளும் வகையில் சத்தியப்பிரமாணத்தை வாசித்த போது அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையிலேயே வடமாகாண முதல்வரின் இந்த செயல் தொடர்பில் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
மேலும், எதிர்க்கட்சி தலைவருடனான உரையாடலை புறக்கணித்து ஆயுத குழுக்களின் கைப்பாவையாக செயற்படுவதுடன், புதிய அமைச்சர்களையும் நியமித்து எதிர்க்கட்சி தலைவர் இல்லாத நிலையில் நியமித்தமை தொடர்பிலும் விமர்சனங்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.