20,000 வருடங்கள் பழமையான இயற்கை அதிசயத்தை காண்பதற்கு அரிய சந்தர்ப்பம்!

ஒரு உறைந்த பாரிய பனிப்பாறை -கனடாவின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான 20,000வருடங்கள் பழமையான மிதக்கும் பனிப்பாறை கனடா தினத்தை முன்னிட்டு கிங்ஸ்ரன் ஊடாக ஒட்டாவா பயணித்துள்ளது.

கனடாவின் 150-வது பிறந்த தினத்தை கொண்டாட கனடாவிற்கு சொந்தமான Iceberg Vodka நியு பவுன்லாந்தின் மிதக்கும் மாபெரும் பனிப்பாறை அட்லாந்திக் சமுத்திரத்திலிருந்து பயணித்து ஒன்ராறியோ ஊடாக ஒட்டாவா சென்றடையும்.

2,500 இறாத்தல்களிற்கும் அதிகமான எடையுடைய இந்த பனிப்பாறை வெளிப்படையான ஐஸ்-பஸ் மூலம் கொண்டு வரப்படுகின்றது.

சமுதாய அங்கத்தவர்கள் இந்த பனிப்பாறையை வந்து பார்க்கவும் ஒரு துண்டை சுவைத்து பார்ப்பதற்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.காலை 9.30-மணியில் இருந்து கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் பார்வைக்கு இருக்கும் என கூறப்படுகின்றது.

மேலதிக விபரங்களிற்கு ருவிட்டரில் #CanadasVodka அல்லது Iceberg Vodka’s Facebook page இல் அறிந்து கொள்ளலாம்.