பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் ஷோ தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். நூறுநாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
15 பிரபலங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஜுலியும் ஒருவர்.
அவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் ஆதரவான கருத்துக்களும், சில எதிர்மறையான கருத்துக்களும் உலா வரத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் ஜூலியிடம் கேட்கும் சில கேள்விகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், ஹலோ ஜுலி அக்கா நீங்கள் இந்நிகழ்ச்சியின் போது விவசாயத்தைப் பற்றி பேசினீர்கள், அது எல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை.
இந்நிகழ்ச்சியில் உங்களை 100-நாட்கள் ஒரு வீட்டில் தங்க சொல்கிறார்கள், அதற்கு நீங்கள் ஒரு விவசாயி வீட்டில் நூறு நாட்கள் தங்கி, அவர்களின் கஷ்டங்களை கூறியிருக்கலாமே என்று அச்சிறுமி கேள்வி எழுப்பியுள்ளார்.