நாடாளுமன்றத்தில் இன்று நள்ளிரவு ஜி.எஸ்.டி அறிமுக விழா நடைபெறவுள்ளது. இதனை, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில்,
எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதா என்று தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவை கொண்டு வந்ததே திமுக, காங்கிரஸ் தான், ஆனால் இப்போது எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
மேலும், ஜெயலலிதாவின் கோரிக்கைகளை ஏற்று சில திருத்தங்களை செய்ததால் ஜிஎஸ்டியை ஆதரித்தோம் என்று தெரிவித்தார்.