ஐ.எஸ் அமைப்பிலுள்ள இலங்கையர் கொல்லப்பட்டுள்ளார்!

சிரியாவின் ரக்கா நகரில் அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல் ஒன்றில் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த அஹமட் தாஜூடீன் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கல் தெரிவிக்கின்றன.

இவர் கொழும்பு சுற்றுலா விடுதி ஒன்றில் பணியாற்றியிருந்ததோடு துருக்கியின் ஊடாக சிரியாவிற்குள் பிரவேசித்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்துகொண்டுள்ளார்.

இந்த பயங்கரவாத அமைப்பில் இன்னமும் எத்தனை இலங்கையர்கள் இணைந்துகொண்டுள்ளனர் என்பது பற்றிய என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லையாயினும் இதற்கு முன்னரும் கேகாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சிரியாவில் போராடி உயிரிழந்திருந்தார்.

எப்படியாயினும் இலங்கையிலிருந்து சிலர் மக்காவிற்கு செல்வதாகக் கூறி, அங்கே செல்லாமல் சிரியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.