பாடசாலை சென்று கொண்டிருந்த வித்தியாவை வழிமறித்த சந்திரகாசனும் பெரியதம்பியும் அவளை பாழடைந்த வீட்டிற்குள் தூக்கிச் சென்று பெரியதம்பி, சந்திரகாசன், செந்தில், ரவி ஆகிய நான்கு பேரும் சுமார் ஒன்றேகால் மணி நேரமாக மாறி மாறி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர்.
அப்போது படுத்த நிலையில் இருந்த அவள் சத்தம் எதுவும் போடவில்லை. அவளது கையையும், காலையும் பெரியதம்பியும் சந்திரகாசனும் பிடித்திருந்தார்கள்.
அதன் பின்னர் அவளை கைப்பந்தமாக தூக்கிச் சென்று அலரி மரத்துடன் கட்டிப் போட்டார்கள். அவளை வன்புணர்வு செய்யும் போது அதனை பெரிய டச் மொடல் போனில் சந்திரகாசனும் பெரியதம்பியும் மாறி மாறி படம் எடுத்தார்கள்.
இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவராகவும் கண்கண்ட சாட்சியாளராகவுமுள்ள நடராசா குகனேசன் (மாப்பிள்ளை) ட்ரயல் அட்பார் நீதிமன்றில் நேற்றைய தினம் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
குறித்த வித்தியாவின் படுகொலை வழக்கானது யாழ் மேல்நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் நீதியரசர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்று வியாழக்கிழமை 2வது நாள் விசாரணைக்காக மன்று கூடியிருந்த போது நடராசா குகனேசன் என்பரின் சாட்சியப் பதிவுகள் ஆரம்பமாகியிருந்தன.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் குமார்ரட்னம் ஜெனரலுடைய வினாக்களுக்கு பதிலளித்த சாட்சியாளரான குகனேசன் தெரிவித்த சாட்சியத்தின் பதிவுகள் வருமாறு,
12ம் திகதி எனது வீட்டிற்கு வந்த சந்திரகாசனும் பெரியதம்பியும் வித்தியாவுடன் திருமணம் தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி என்னைக் கூட்டிச் சென்றார்கள். ஆனால் அன்று வித்தியாவுடன் இன்னுமொருவர் வந்ததால் பேசவில்லை.
மீண்டும் மறுநாள் 13ம் திகதி வித்தியா பாடசாலை செல்லும் வீதியான சின்னாலடி பகுதிக்குச் சென்றோம். அவர்கள் என்னை பற்றைக்குள் மறைந்திருந்து பார்க்குமாறு கூறினார்கள்.
அப்போது அவ்விடத்திற்கு ரவியும் தவக்குமாரும் வந்தார்கள். சைக்கிளில் வந்த வித்தியாவை சந்திரகாசனும் பெரியதம்பியும் வழிமறித்து பற்றைக்குள் கொண்டு சென்று உடைகளைக் கழற்றினார்கள்.
அச்சமயத்தில் வித்தியா அணிந்திருந்த கண்ணாடியை கழற்றிய பெரியதம்பி வித்தியாவைப் பார்த்து நான் உன்னைக் காதலிக்கிறேன், உனக்கு விருப்பமில்லையா? எனக் கேட்டான்.
அப்போது அவள் குழறினாள். உடனே அவளது வாயைப் பொத்தி தூக்கிச் சென்று பெரியதம்பியும் சந்திரகாசனும் அவளை மாறிமாறி வன்புணர்வு மேற்கொண்டார்கள். சுரேஷ் வித்தியாவின் சைக்கிளை தூக்கிச் சென்றான்.
செந்தில், ரவி, சந்திரகாசன், பெரியதம்பி ஆகியோர் வித்தியாவை பாழடைந்த வீட்டிற்குள் தூக்கிச் சென்றார்கள். அப்போது நான் குழுறிக் கொண்டு வெளியே வந்தேன். பெரியதம்பி கத்தியைக் காட்டி என்னை மிரட்டினான்.
அவள் அணிந்திருந்து ஆடைகள், சப்பாத்து அனைத்தும் வெள்ளை நிறத்திலானவை. பாடசாலைப் பிள்ளையடா அவளை விடுங்கோடா என கேட்டேன். ஆனால் அவர்கள் நான்கு பேரும் அவளை வன்புணர்ந்தார்கள்.
அவள் அப்போது படுத்த நிலையிலேயே இருந்தாள். சத்தம் எதுவும் போடவில்லை. கை, கால்களை பெரியதம்பி, சந்திரகாசன் ஆகியோர் பிடித்திருந்தார்கள். முதலில் பெரியதம்பியும், அடுத்து சந்திரகாசன், அதற்கடுத்து செந்திலும் வன்புணர்ந்தார்கள் அப்போது அவள் மயங்கிப்போனாள். சந்திரகாசனும் பெரியதம்பியும் அவளை வீடியோ படம் எடுத்தார்கள்.
அப்போது எடுத்த வீடியோப் படத்தை சுவிஸ்குமார் சுவிஸ் நாட்டிற்கு கொண்டு போகப் போவதாக கதைத்தார். அதன் பின்பு அவளை கைப்பந்தமாக தூக்கிச் சென்று 50 மீற். தூரத்தில் உள்ள அலரி மரத்தில் கட்டினார்கள்.
அதன்பின்னர் நான் 08.30 மணிபோல் சீவல் தொழிலுக்கு சென்றுவிட்டேன். 915 மணியளவில் பெரியதம்பியும் சந்திரகாசனும் சுரேசும் எனது வீட்டிற்கு வந்து கள் வாங்கிக் குடித்தார்கள். பின்னர் மாலையும் வந்து கள் கேட்டார்கள். நான் சீவப் போகவில்லை என்பதால் கள் இல்லை என்றேன்.
இச்சம்பவம் தொடர்பாக நான் அச்சம் காரணமாக நான் கூறவில்லை. ஏனெனில் பெரியதம்பி மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பணபலம் மிக்கவர்கள் பொலிஸில் செல்வாக்குள்ளவர்கள் என்பதனால் பயந்து நான் இதுவிடயத்தை கூறாது மறைத்தேன்.
இச்சம்பவம் நடந்தது புதன்கிழமை, மறுநாள் நான் வித்தியா இறந்து கிடந்த இடத்திற்கு நான் சென்றேன். அங்கே பொலிஸாரும் சம்பந்தப்பட்டவர்களும் அங்கு நின்றிருந்தார்கள்.
சுவிஸ்குமாரை எனக்கு தெரியாது, சுரேஸ்கரனே எனக்கு அறிமுகப்படுத்தினார். பெரியதம்பியும் சுவிஸ்குமாரும் மைத்துனர் உறவுமுறையில் உள்ளவர்கள். பெரியதம்பி எடுத்த வீடியோ படத்தை சுவிஸ்குமாரிடம் கொடுத்ததாக என்னிடம் சொன்னார்.