வழித்தட அனுமதிப் பத்திரமின்றி பயணிகளை ஏற்றிவந்த வாகனச் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றால் நேற்று 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மே 18 ஆம் திகதி முதன்மைச் சாலையில் பயணிகளுடன் வந்த வாகனத்தைப் பரிசோதனை செய்த போது பயணிகளை ஏற்றுவதற்கான வழித்தட அனுமதிப் பத்திரம் இல்லாதமை கண்டு பிடிக்கப்பட்டது.
அதனையடுத்து பொலிஸார் சாரதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு நேற்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது வாகனச் சாரதி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது