மீண்­டும் விடுதலைப் புலிகள் இயக்கம் …….

விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்­டும் தலை தூக்­கு­வ­தற்­குச் சாத­க­மான ஒரு யுகம். அதற்குத் தேவை மைத்­திரி ஆட்சி. இப்­போது அந்த யுகம் தோன்­றி­விட்­டது.

புலி­கள் மெல்ல மெல்ல தலை­தூக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர். புதிய அர­ச­மைப்­பின் ஊடாக கூட்­டாட்சி கொடுக்­கப்­ப­டு­வ­தற்கு முன் இந்த அரசு கவிழ்க்­கப்­ப­ட­வேண்டும்.இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

எமது நாட்டில் உள்ள தொழிலார்கள்,வர்த்தகர்கள்,சிறுபான்மை இன மக்கள் மற்றும் ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிக்கு வாக்களித்தோர் என எல்லோரும் இன்று குழப்பத்திலும் கவலையிலும் உள்ளனர்.இந்த நாடு புதிய வழியில் பயணிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர்.

எமது ஆட்சியில் பல விடயங்களைச் செய்தோம்.போரை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குப் பலமான அடித்தளத்தை இட்டோம். பன்னாட்டுக் கடன் சுமை குறைந்தது.ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டது.பயங்கரவாதத்துக்கு முடிவுகட்டி பன்னாட்டுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தோம்.

பன்னாட்டு அழுத்தங்கள் இருந்தபோதும்கூட அவற்றையும் தாண்டி நாம் இந்த நாட்டை முன்னோக்கி நகர்த்தினோம். அதைவிடவும் விரிவான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தியாகமிக்க முன்னுதாரணமிக்க-உணர்வுமிக்க தலைமைத்துவத்தின் தேவையை மக்கள் உணர்ந்துள்ளனர்.

ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த அரசு பயணிக்கின்றது.புதிய அரசமைப்பின் ஊடாக கூட்டாட்சி கொடுக்கப்படுவதற்கு முன்-எட்கா ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் இந்த அரசு கவிழ்க்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் போனதைத் திரும்பப் பெற முடியாமல் போய்விடும். அரசின் மோசமான பயணத்தை நிறுத்துவதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

புலிகளுக்குத் தேவையாக இருப்பது மீண்டும் தலை தூக்குவதற்குச் சாதகமான ஒரு யுகம். அதற்குத் தேவை மைத்திரி ஆட்சி என்று அப்போது நாம் கூறியபோது மக்கள் நம்பவில்லை. பன்னாட்டுச் சதி என்று கூறியபோது அதைக் கேலியுடன் பார்த்தனர்.நாம் அப்போது கூறியவை எல்லாம் இப்போது உண்மையாகிக்கொண்டு போகின்றன-என்றார்.