குடிப்பதற்காக பால் கவரை எடுத்த 5 வயது சிறுமி, வளர்ப்பு தாயால் ஈவு இரக்கமின்றி இரண்டு கைகளையும் கட்டி வீட்டில் தொடங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியட்னாமில் உள்ள பு தோ மாகாணத்தில் 5 வயது சிறுமி வசித்து வந்தார். ஒரு குற்றத்திற்காக இவளது பெற்றோர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனால் புவோங் என்ற வளர்ப்புத் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். புவோங் வின் புச் மாகாணத்தில் வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் அந்த சிறுமிக்கு பசி எடுத்துள்ளது. இதனால் அட்டை பெட்டியில் உள்ள பாலை எடுத்து குடித்துள்ளார். இதனால் வளர்ப்பு தாயான புவோங், ஈவு இரக்கமின்றி அந்த சிறுமியின் இரண்டு கைகளின் மணிக்கட்டையும் கயிற்றால் கட்டினார். பின்னர், வீட்டுக் கூரையில் இருக்கும் கம்பியில் கயிற்றின் முறுமனையை கட்டிவிட்டார். இதனால் அந்த சிறுமி அந்தரத்தில் தொடங்கவிடப்பட்டாள். அவளது காலுக்கும், தரைக்கும் இடையில் சுமார் ஐந்து அடிக்கு மேல் இருந்தது. இதனால் அந்த சிறுமி அலறித்துடித்தாள்.
சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவ காணொளி ஆன்லைனில் பரவியது. இந்த காணொளியின் அடிப்படையில் காவல் துறை வளர்ப்புத் தாயை கைது செய்தனர். ஆனால், அவரது கணவரை கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட வளர்ப்புத்தாய், ‘‘பாக்கெட் பணத்திற்காக எனது உடைமைகளை திருடி அந்த சிறுமி விற்றாள்’’ என்று குற்றம்சாட்டினார்.