பலத்த மின்சார வேலி இலங்கையில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இரகசிய தளம்

அமெரிக்காவில் காணப்படும் மிக இரகசிய இடமான ஏரியா 51 எனப்படும் பிரதேசம் மர்மமான ஓர் இடமாக வர்ணிக்கப்படுகின்றது.

இந்த இடத்திற்கு அனுமதியின்றி எவரும் நுழைய முடியாது. அதேவகையில் இலங்கையிலும் ஓர் இரகசிய இடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப்பகுதி ஹலாவத்தை இரனவில எனும் இடத்தில் காணப்படுகின்றது. குறித்த இடத்திற்கு பிரதேசவாசிகள் மட்டுமல்லாது வெளிநபர்கள் எவருக்கும் உட்செல்ல அனுமதி கொடுக்கப்படுவது இல்லை.

vo

மேலும் இந்த இடம் ஆரம்பத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் இது 400 ஏக்கர் பரப்பளவாக விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த இடத்தில் நடைபெரும் விடயங்கள் குறித்து செய்திகள் வெளிவருவது இல்லை. அமெரிக்காவின் முழுக் கட்டுப்பட்டிலேயே இந்த பிரதேசம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2

வாய்ஸ் ஒப் அமெரிக்கா (voice of america iranawila) என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த மர்மப் பிரதேசத்தைச் சுற்றி பாதுகாப்பிற்காக மின்சார வேலி பொறுத்தப்பட்டுள்ளது.

அந்த வேலியானது சுமார் 33000 வோல்ட் மின் அளவை கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

3

இந்தப் பகுதிக்கு உள்ளே மிகப்பெரிய விமான ஓடு தளங்களும், விமானம் நிறுத்துவதற்கான இடங்களும், அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரதான மூவரின் கட்டுப்பாட்டிலேயே இந்த இடம் இயங்கிவருவதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இந்த இடத்தின் உள்ளே நடைபெறும் விடயங்கள் எவையும் வெளிப்படுத்தப்படுவது இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தவிர இதேபோன்று 14 நாடுகளில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இவ்வாறான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

44