மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி தமிழ்,சிங்கள மொழிகளில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் இடம்பெறும்.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளளார் என்று மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.
அதே வேளை மடு திருவிழாவிற்காக அரச நிதியாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர்.குணவர்த்தன மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் கையளித்துள்ளார்.