யூடியுப் சமூகதளத்தில் சாகசம் நிகழ்த்த முயன்று தனது காதலனை சுட்டுக் கொன்ற அமெரிக்க பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
19 வயதான மொனாலிசா பெரஸ் யூடியுப் வீடியோ ஒன்றுக்காக தனது காதலன் பெட்ரோ ருயிஸின் நெஞ்சில் புத்தகம் ஒன்றை வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அந்த புத்தகம் துப்பாக்கி குண்டு தாக்குவதை தடுக்கும் என்று எதிர்பார்த்து இந்த சாகசத்தை நிகழ்த்திய போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
இந்த ஜோடிக்கு மூன்று வயது குழந்தை ஒன்று இருப்பதோடு துப்பாக்கி குண்டு நெஞ்சில் பாயும்போது அதனை சுமார் 30 பேர் வரை பார்த்துள்ளனர்.
இந்த சாகசத்திற்கு பின் அவர்களது சமூகதளத்தின் வருகை எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ருயிசின் அத்தை குறிப்பிட்டுள்ளார்.
யூடியுபில் மேலும் பிரபலமடையவே இவர்கள் இந்த சாகச முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தனது அயலவர்கள் பார்த்திருக்க ஒரு அடி தூரத்தில் இருந்து ஒற்றை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இது தனது காதலனின் யோசனை என்று பெரஸ் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.