இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட 11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஒன்பது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் சேவை தேவைகள் அடிப்படையில் பொலிஸ் மா அதிபரினால் மாற்றப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.