கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியன இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்;ஸ்மன் கிரியெல்ல, இலங்;கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோரால் இக்கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு இலங்கை- இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் கீழ் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இக்கட்டடங்கள் சுமார் 550 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில் இக்கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.