உறவுகளால் கைவிடப்பட்டு சாலையோரம் அநாதரவான நிலையில் இருந்த வயோதிபர் ஒருவர் மீட்கப்பட்டு க்கைதடி அரச முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
கோப்பாய் நாவலர் மகாவித்தியாலயத்துக்கு அருகில் வெள்ளை வேட்டியும், சேட்டும் அணிந்திருந்த முதியவர் சாலையோரமாக உறங்கிக் கொண்டிருந்தார்.
முதியவரின் நிலையை அறிந்த பிரதேச மக்கள் கைதடி முதியோர் இல்லத்துக்கு அறிவித்தனர். முதியோர் இல்ல நிர்வாகத்தினர் அந்த இடத்துக்கு வருகை தந்து முதியவரை அழைத்துச் சென்றனர். வேலணை வங்காளவடியைச் சேர்ந்த இலகுப் பிள்ளை நடராஜா( வயது – 82) என்ற முதியவரே இவ்வாறு மீட்கப்பட்ட வராவார்.
தனது பிள்ளைகள் யாவரும் வேலணையில் வசிப்பதாகவும், ஒரு மகள் பிரான்சில் வசிப்பதாகவும் அந்த முதியவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட முதியவரின் உரித்தானவர்கள் யாராவது இருந்தால் உடனடியாக கைதடி முதியோர் இல்ல நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அத்தியட்சகர் த.கிருபாகரன் கேட்டுள்ளார்.