ஒற்றுமையாகச் செயற்படுங்கள்! : விக்னேஸ்வரனுக்கு இந்தியத் தூதுவர் அறிவுரை

ஒற்றுமையாகச் செயற்படுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து அறிவுரை கூறியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்தியத் தூதுவராகப் பதவியேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கு முதல் தடவையாக வியாழக்கிழமை சென்ற இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, வடக்கு மாகாண முதலமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டிருந்த உச்சக்கட்ட குழப்பம், அதன் பின்னரான நிலைமைகளிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, வடக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கு உங்களிடம் ஒன்றுபட்ட ஒற்றுமை இருக்கவேண்டும்.

அரசியல் தீர்வை எடுப்பதற்கும் ஒற்றுமையாக இருப்பது உதவியாக இருக்கும் என்றும் முதலமைச்சரிடம் இந்தியத் தூதுவர் எடுத்துரைத்தார் என்று கூறப்படுகின்றது.

உள் அரசியல் விவகாரங்களில் நேரடியாகத் தலைபோடுவதை அவர் தவிர்த்து மறைமுகமாகவே விடயங்களைச் சுட்டிக்காட்டியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.