குழந்தைத்தனமான ஒழுங்கற்ற செயலே பயங்கரவாதம்:ராஜித சேனாரத்ன

ரஸ்யாவின் தத்துவஞானி விளாடிமிர் லெனின் உயிருடன் இருந்திருந்தால், தற்போது பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளை பயங்கரவாதம் என்று விமர்சித்திருப்பார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்து கலகம் விளைவித்த சம்பவம் தொடர்பிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

லெனின் கூற்றுப்படி ஒரு குழந்தைதனமான ஒழுங்கற்ற செயற்பாடே பயங்கரவாதமாகும்.

எனவே பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடும் அவ்வாறே இருந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த செயற்பாடு குறித்து வருத்தம் வெளியிட்டுள்ளமை வியக்கத்தக்க செயலாகும்.

குடிநீருக்காக போராட்டம் நடத்தியவர்களை கொலை செய்த ரத்துபஸ்வல சம்பவத்தில் தொடர்புடைய அவர் பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில் ஒருவர் கூட கொல்லப்படவில்லை என்பதை கண்டு வருத்தம் கொண்டவராகவே தமது கருத்தை வெளியிட்டுள்ளதாக ராஜித குறிப்பிட்டுள்ளார்.