கட்டாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு போலி செய்திகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறையில் போலி செய்திகள் வெளியிடுவதற்கு பின்னால் பல்வேறு அரசியல் தேவைகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கட்டார் அரசாங்கம் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் போலி செய்தி வெளியிடப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பென் குரியன் விமான நிலையத்தில் தங்கள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்தியை சவுதி அரேபிய தேசிய விமான சேவையான சவுதியா நிறுவனம் நிராகரித்துள்ளது.
போலியான செய்திகளை பதிவிடுவதற்கு பலர் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
போலியான தகவல்களை வெளியிட்டு தேசிய விமான சேவையின் பெயரை கெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக குறித்த விமான சேவை நிறுவனத்தின் பேச்சாளர் அப்துல் ரகுமான் அல் தைப் தெரிவித்துள்ளார்.
இறுதியாக சிலர் உண்மையை அறிந்து கொண்டு அதன் உண்மை தன்மையை டுவிட்டர் ஊடாக மீண்டும் பதிவிட்டுள்ளனர்.
இவ்வாறு போலியான தகவல்களின் பொறுப்புகளை வெளியிடுபவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு சட்டத்தின் முன்னால் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.