வவுனியா அன்பகம் துன்புறுத்தல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை!

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அன்பகம் சிறுவர் இல்லத்தில்இடம்பெற்றதாக கூறப்படும் சிறுவர் வன்முறைகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போரின் வலிகளை சுமந்த எமது சமூகத்தில் இன்று பல சிறுவர், சிறுமியர்கள் தமதுதாய், தந்தையரை இழந்தவர்களாகவும், தமது வாழ்விடங்களில் பாதுகாப்புஅற்றவர்களாகவும் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிறுவர்வன்முறைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறான சிறுவர்,சிறுமியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் இடமாகவும், அடைக்கலம் கொடுத்துபாதுகாக்கும் இடமாகவும் சிறுவர் இல்லங்கள் இருந்து வருகின்றன.

ஆனால், அந்த சிறுவர் இல்லங்களே சிறுவர்களின் பாதுகாப்பைகேள்விக்குட்படுத்துமாக இருந்தால் அத்தகைய சிறுவர் இல்லங்கள் எதற்கு என்றகேள்வி எழுவதுடன், அங்கு தங்கியிருக்கும் சிறுவர்களின் எதிர்காலம் குறித்தும்கேள்வி எழுகிறது.

இந்நிலையில், வவுனியா வேப்பங்குளம் அன்பகம் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்தநிலையில் இரண்டாவது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிறுவர் பாதுகாப்புஅதிகாரிகள், சிறுவர் இல்ல பாதுகாவல்கள் என பலரது மேற்பார்வையின் கீழ் இருந்தமாணவிகள் தற்கொலை செய்தமைக்குரிய உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும்.

குறித்த சிறுவர் இல்லத்தில் துன்புறுத்தல்கள் இடம்பெற்றதாக மரணித்த மாணவியால்முன்னர் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் இதன் உண்மைத் தன்மை குறித்து விசாரணைகள் செய்யப்பட்டு அங்குதங்கியுள்ள சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.