ஜிஎஸ்டி என்பது பகவத் கீதையை போன்றது.. உதாரணத்தோடு விளக்கிய மோடி!!

கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஜி.எஸ்.டி வரி நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி அறிமுக விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பேசியதாவது: நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சி நடக்கிறது. பொருளாதாரம் தொடர்பான முக்கிய நிகழ்வு இது. நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி குறித்து பலமுறை பேசியிருக்கிறார்கள். அந்த விவாதங்கள் தான் இந்த ஜி.எஸ்.டி. சுதந்திர நள்ளிரவை போல இந்த நள்ளிரவும் முக்கியமானதாகிறது.

பல்வேறு மாகாணங்களை இணைத்து ஒரே இந்தியாவாக மாற்றினார் சர்தார் வல்லபாய் பட்டேல். ஜிஎஸ்டி வரி விதிப்பும் இந்தியாவை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்துள்ளது. காஷ்மீர் முதல் லட்சதீவு வரை இப்போது ஒரே வரிதான். மாநிலத்திற்கு மாநிலம் இனிமேல் வரி மாறுபடாது.

முதலில் மாநிலங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. தொடர்ந்து ஆலோசித்து வந்ததையெடுத்து, அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முயற்சித்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காமல் போகாது. கீதையில் 18 அத்தியாயங்கள் இருப்பதைப் போன்று 18 கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு ஜிஎஸ்டி அறிமுகமாகியுள்ளது என்றார்.