தேவையான பொருட்கள் :
வரகரிசி மாவு, தினையரிசி மாவு, சிவப்பரிசி மாவு சேர்த்து – 2 கப்
பனைவெல்லம் – 300 கிராம்
நெய் – தேவையான அளவு.
செய்முறை :
* பனை வெல்லத்தை தூளாக்கி கொள்ளவும்.
* வாணலியில் 500 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் பனைவெல்லத்தை தூளாகி, கொட்டி கொதிக்கவைக்க வேண்டும்.
* பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி அந்த கரைசலை வடிகட்டவும்.
* வடிகட்டிய பனை வெல்ல கரைசலை மீண்டும் வாணலியில் வைத்து கொதிக்க வந்ததும் சிறு தானிய மாவுகளை அதில் தூவி கட்டியில்லாமல் கைவிடாமல் வெல்லப்பாகுவை கிளற வேண்டும்.
* களி பதத்துக்கு வந்ததும், நெய்விட்டு கிளறி இறக்க வேண்டும்.
* சத்தான சிறுதானிய பனை வெல்லக்களி ரெடி.
* இது சிறுவர்கள், இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு மிக சிறந்த உணவாகும்.