வெற்றியை அள்ளித்தரும் சூரிய ரேகை உங்களுக்கு எப்படி……..

கையில் உள்ள ரேகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனைக் குறிக்கும். உள்ளங்கையில் உருவாகும் ரேகைகள், தெளிவாக மற்றும் அழுத்தமாக இந்தால், அதற்கான பலனும் நீண்ட காலம் இருக்கும்.

சூரிய ரேகை என்றால் என்ன?

நம் உள்ளங்கையில் விதி ரேகையில் இருந்து, சூரிய மேட்டை நோக்கி செல்வதே சூரிய ரேகை ஆகும்.

சூரிய ரேகையின் பலன்கள் என்ன?

  • மோதிர விரலின் அடிப்பாகம், சூரிய மேடாக கருதப்படுகிறது. இது ஒருவருடைய உழைப்பினால் ஏற்படும் முன்னேற்றம், புகழ், வெற்றி ஆகிய அனைத்திற்கும் காரணமாக திகழ்கிறது.
  • சூரிய ரேகையானது, ஒருவரின் கையில் தெளிவாக, கம்பீரமாக அமைந்திருந்தால், அது அவருக்கு சூரியனது பலம் பூரணமாக உள்ளது என்பதை குறிக்கும்.
  • சூரிய விரல் மேட்டில் ஒரு செங்குத்து ரேகை இருந்தால், அது அவருக்கு புகழ், செல்வம், செல்வ வளம் அமைந்திருக்கும் என்று அர்த்தம்.
  • ஒரு செங்குத்து ரேகையின் மேல் ஒரு நட்சத்திர குறி அமைந்திருந்தால், அது அவர்கள் சிறந்த புத்திமானாகத் திகழ்வார்கள் என்றும் அவர்களுக்கு புகழும், திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும் என்று அர்த்தமாகும்.
  • சூரிய ரேகையின் மேட்டில் சதுரக் குறி அல்லது பெருக்கல் குறி இருந்தால், அவர்கள் செல்வந்தராக இருந்து, எளிமையாக வாழ்வார்கள் என்பதை கூறுகிறது.
  • சூரிய மேடு வலுவிழந்த நிலையில் மெல்லியதாக இருந்தால், அவர்கள் அரசு வேலை அல்லது அரசு சார்ந்த வேலையில் தோல்வியை சந்திக்கக் கூடும். அதனால் அவர்கள் சுய தொழில் செய்யும் நபராக இருப்பார்கள்.
  • சூரிய மேடு ஒருவருக்கு அழுத்தமாகவும், தெளிவாகவும் இருந்தால், அவர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள் என்று அர்த்தமாகும்.
  • ரேகை இல்லாமல் ஒரு நட்சத்திரக் குறி மட்டும் இருந்தால், அவர்களுக்கு பல காலம் கஷ்டத்திற்கு பின் திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும் என்று அர்த்தமாகும்.

tamil