பிரென்ச் ஃப்ரைஸ்யால் விரைவில் மரணமடைய வாய்ப்புள்ளது

பிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிடுவோர் மற்றவர்களை விட விரைவில் மரணமடைய வாய்ப்புள்ளது என அய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த 8 ஆண்டுகளாக விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். இதில் பிரென்ச் ஃப்ரைஸ்யால் விரைவில் மரணமடைய வாய்ப்புள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 4440 பேர் ஈடுப்படுத்தப்பட்டனர். அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 14 கிலோ பிரென்ச் ஃப்ரைஸ் சாப்பிட்டனர். கடந்த 8 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் உடல் பருமன், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 236 பேர் மரணமடைந்துள்ளனர்.