சுழிபுரத்தில் 8 கிலோ 900 கிராம் கஞ்சா போதைப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்த தகவலையடுத்து வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நடத்திய திடீர் தேடுதலின்போது வீட்டின் பின்புறத்தில் கஞ்சா போதைப் பொருள் பொதிகளாக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.
அவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வீட்டிலுள்ள 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பொலிஸ் விசாரணையிலுள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.