வவுனியா கூமாங்குளத்தில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை நேற்றைய தினம் 6.30 மணியளவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கூமாங்குளம் – பல்லவன்குளம் பகுதியில் வசித்து வரும் சுப்பையா பெரியசாமி (56) என்பவர் அவரது வீட்டு கிணற்றில் நீர் அள்ளும் சமயத்தில் கிணற்றினுள் வீழ்ந்து மரணித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சடலம் மீட்கப்பட்ட கிணறு பாதுகாப்பற்ற கிணறு என்பதும் குறிப்பிடத்தக்கது.