நான்கு மாவட்டங்களில் மாலை வேளை யில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக காலநிலை அவதான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவதான நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள நிலைவர அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலநிலை குறித்து அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மேல் மாகாணம் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அதேவேளை சிறிதளவில் மழைவீழ்ச்சியும் பதிவாகும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
அதனால் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மீனவக் குடும்பங்களும் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடற் பிரதேசங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர்கள் வரையில் இருக்கும். மேலும் அநுராதபுரத்தில் சிறிதளவு மழைவீழ்ச்சி பதிவாகும்.
மட்டக்களப்பில் 2 மணிக்கு பின்னர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுகின்றது, நுவரெலியாவில் பல தடவைகள் மழைவீழ்ச்சி பதிவாவதோடு கொழும்பு, காலி, நுவரெலியா, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலும் சிறிதளவு மழை வீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் தென்படுகின்றது.
குறிப்பாக மேல் மாகாணத்திலும் மாத்தளை, திருகோணமலை, பொலனறுவை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும். ஊவா மாகாணம் மற்றும் புத்தளம் பகு தியில் மழை வீழ்ச்சி பதிவாவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அவதான நிலையம் அறிவித்துள்ளது.