27 ஆண்டுகளுக்கு பிறகு மயி­லிட்­டித் துறை­மு­கம் மக்­க­ளி­டம் இன்று ஒப்படைப்பு

27 ஆண்­டு­க­ளா­கப் பாது­காப்­புத் தரப்­பின் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்து வந்த மயி­லிட்­டித் துறை­மு­கம் மக்­க­ளி­டம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட இரா­ணு­வத் தள­பதி, மாவட்­டச் செய­ல­ரி­டம் காணி விடு­விக்­கப்­ப­டு­வ­தற்­கான பத்­தி­ரத்தை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மயிலிட்டி அம்மன் கோவிலை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டும், கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டும் வருகிறார்கள்.

j/249 பிரதேச செயலர் பிரிவில் 54 ஏக்கர் நிலப் பரப்பு மக்­கள் பாவ­னைக்கு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.