உலகிலேயே பெரிய டைனோசர் எங்கு இருந்த்தது தெரியுமா

குஜராத்தில் இருக்கும் சிறிய ஊர் பலசினோர். ஆனால், இங்கு தான் உலகிலேயே பெரிய டைனோசர் எலும்புக்கூடு இருக்கிறது என தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். புதை படிம ஆய்வாளர்கள் இந்த இடத்தில் ஏழு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதுகின்றனர்.

மேலும், ஆராய்ச்சியாளர்கள் இங்கு 10,000 டைனோசர் முட்டைகளையும் கண்டெடுத்துள்ளனர். இது தான் உலகிலேயே பெரிய மூன்றாவது டைனோசர் குஞ்சு பொரிப்பகம் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலசினோர்

பலசினோர் எனும் ஊரில் இருக்கும் கிராமம் தான் ரையோலி (Raiyoli). ஓர் விபத்தாக தான் இந்த இடம் 1981-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. புவியியலாளர்கள் இந்த இடத்தை கனிம வளம் குறித்து ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் போது கண்டுபிடித்தனர்.

உலக சுற்றுலா பயணிகள்

அப்போதிருந்து, இப்போது வரை உலக சுற்றுலா பயணிகளில் இருந்து, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வரை பெரும்பாலானோருக்கு பிடித்தமான இடமாக மாறிவிட்டது இவ்விடம்.

ஆலியா சுல்தானா பாபி

நன்றி கூறும் விதமாக பலசினோர்-ன் முன்னாள் இளவரசியான ஆலியா சுல்தானா பாபி இந்த இடத்தை ஆதரித்தும், பாதுகாத்தும் வருகிறார்.

டைனோசர் இளவரசி

சிலர் இவரை டைனோசர் இளவரசி என்றும் பரவலாக கூறுகின்றனர். இவர் இந்த இடத்திற்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு நிறைய உதவுகிறார். மேலும், இந்த பகுதியில் ஆங்கிலம் பேசி வருபவர்களுக்கு உதவ இருக்கும் ஒரே நபர் ஆலியா சுல்தானா பாபி தான்.

தனித்தன்மை

பலசினோர்-ல் மட்டும் தான் இன்றளவும் சுற்றுலா பயணிகள் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர்-ன் முட்டை படிவங்களை தொட்டு பார்த்து ரசிக்க முடியும்.

தொல்பொருள் ஆராய்ச்சி?

இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சி பகுதியாக அல்லாமல், சுற்றுலா பயணிகளுக்கான இடமாக தான் பிரபலமானது. இங்கு ம்யூசியம் கட்ட ஐந்த ஆண்டுகள் ஆனது. இந்த இடம் ஓர் கைவிடப்பட்ட இடம் போன்று தான் காட்சியளிக்கிறது.

முப்பது ஆண்டுகள்

மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட இந்த இடத்திற்கு உரிய கவனம் இன்றளவும் கிடைக்கப்படவில்லை. ஏன் நம்மில் பலருக்கே இந்த இடத்தை பற்றிய தகவல்கள் தெரியாது.

அகமதாபாத்

அகமதாபாத்தில் இருந்து அரை மணிநேரம் பயணம் மேற்கொண்டால் பலசினோர் பகுதியை சென்றடையலாம். அகமதாபாத்திற்கு விமானம் மற்றும் ரயில் மூலம் செல்ல எளிய போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.

கார்டன் பேலஸ்

பலசினோ-ல் ஓர் கார்டன் பேலஸ் இருக்கிறது. இது ஓர் பாரம்பரியமான தங்குமிடமாகும். இந்த இடம், இங்கு ஆண்ட முந்தைய ஆளுநர்களின் குடும்பத்தாரால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நீங்கள் குடும்பத்துடன் தங்க முடியும்.