பெண்களுக்கு மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் சக்தி

ஒருவரின் மனநிலையை அறிந்து கொள்ளும் சக்தி அபூர்வமாக ஒரு சிலரிடம் மட்டுமே உள்ளது என்ற பரவலான கருத்து உள்ளது. ஆனால் மனிதனின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறியும் சக்தி பெண்களுக்கு உண்டு என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 89 ஆயிரம் பேரிடம் இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டது.

 அவர்களில் மனிதனின் கண்களைப்பார்த்து மன நிலையை அறியும் சக்தி ஆண்களைவிட பெரும்பாலான பெண்களுக்கு இருந்தது. மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
131027-ep05-stuart-hello-2-ladies-1920-410x260