வழுக்கை தலை ஆண்கள் மண்டையின் உள்பகுதியில் தங்கம்?

5195551-bald-man-head-410x260

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ளது மொசாம்பிக் நாடு. இந்த நாட்டு மக்கள் போதிய கல்வி அறிவு இல்லாமல் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். இங்குள்ள மக்களிடம் மூட நம்பிக்கை அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் மிலாங்கே மாவட்டத்தில் சமீப காலமாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அதாவது வழுக்கை தலை ஆண்கள் மண்டையின் உள்பகுதியில் தங்கம் இருக்கும் என்று யாரோ வதந்தி பரப்பி உள்ளனர்.

இதனால் அதில் உள்ள தங்கத்தை எடுக்கும் வகையில் வழுக்கை தலை ஆண்களை குறிவைத்து ஒரு கும்பல் கொலை செய்து வருகிறது. இதுவரை 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, வழுக்கை தலை ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் அறுவுறுத்தி உள்ளனர்.