உலகிலேயே மோசமாக போதை கடத்துபவன் இவன்! இவனுக்கு நடந்ததை பாருங்கள்

p
பிரேசிலில், 30 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த போதை கடத்தல்காரன் சிக்கினான். பிரேசில் நாட்டில் 30 ஆண்டு தலைமறைவாக இருந்த போதை கடத்தல்காரன் சிக்கினான் பிரேசில்: தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் போதை பொருள் கடத்தல் பெருமளவில் நடக்கிறது. கும்பல்களை ஒழிக்க தீவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் லூயிஸ் கார்லோஸ் டா ரோச்சா என்பவனை போலீசார் கடந்த 30 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
ஒயிட் ஹெட் என்ற புனைப் பெயரும் இவனுக்கு உண்டு. இதற்கிடையே விக்டர் லூயிஸ் டி மொராயஸ் என்ற போதை பொருள் கடத்தல்காரனின் போட்டோவை போலீசார் ஆய்வு செய்தனர். அதை பார்த்த போது அவன் போலீசாரால் தேடப்பட்ட லூயிஸ் கார்லோஸ் ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதை தொடர்ந்து அந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் லூயிஸ் கார்லோஸ் என்பது தெரிய வந்தது.
இவன் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தனது முகத்தை பிளாடிஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றி இருந்தான். இவன் பொலிவியா, பெரு, கொலம்பியாவில் இருந்து கொகைன் போதை பொருளை கப்பல் மூலம் பிரேசிலுக்கு கொண்டு வந்து அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு கடத்தி வந்தான். அவனுக்கு 50 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.