இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கத்தில், பிரபுதேவா மற்றும் ஹன்சிகா நடித்து வரும் திரைப்படம் குலேபகாவலி. இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை ஷூட் செய்ய ரூ.2 கோடி செலவில், கலை இயக்குநர் கதிர் பிரம்மாண்டமான செட் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் விவேக் – மெர்வின் இசையமைக்க, பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், நடன இயக்குநர் ஜானி பாடலுக்கு நடனம் அமைக்கிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கே.ஜே.ஆர். ராஜேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும், இப்ப்டத்தின் உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.