சுவிட்சர்லாந்து தலைநகர் பேர்ணில் 55 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கான நலத்திட்ட ஆலோசனைகள், ஓய்வூதியம்பெறும் வழிமுறைகளுக்கான உதவிகள் என்பன ஒழுங்கு செய்யப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல், நேற்று முன்தினம் 9.30 மணிமுதல் 12.30 மணிவரை இணையர் நந்தினி. முருகவேலினால் தமிழ்மொழியில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, Einwohnerdiensten der Stadt Bern பொறுப்பதிகாரி Herr Hubert Feller, சைவநெறிக்கூடத்தின் பொறுப்பு அதிகாரிகளில் ஒருவரும், மதகுருவுமான த.சசிகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், ஒருவருடைய இறப்பு தொடர்பாக சைவநெறிக்கூடம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை மதகுரு த.சசிகுமார் அவர்கள் விளக்கமாகக் கூறியுள்ளார்.
இணையர் நந்தினி முருகவேள் அவர்களின் சேவை வரவேற்கத்தக்கதும், எங்களுடை மக்களுக்கு இந்த சேவை மிகவும் தேவையானதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Caritas நிறுவனத்தில் இருந்து வருகை தந்திருந்த வெளிநாட்டவர்களுக்கான பொறுப்பதிகாரி Frau Siblly Vogt கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை இணையர் நந்தினி முருகவேள் அவர்களுடன் இணைந்து வயோதிபர்களுக்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.
இணையர் நந்தினி முருகவேள் அவர்கள் வயோதிபர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கான ஓர் மேற்படிப்பினை செஞ்சிலுவைச்சங்கம் (Schweizerisches Rotes Kreuz) பேர்ண் நகரப்பகுதி வயோதிபர்களுக்கான அமைப்பு (Stadt Bern AHV) போன்றவற்றின் மூலம் நிறைவு செய்து அதற்கான சான்றிதழை (Diplom) பெற்றிருக்கின்றார்.
இதனால் எதிர்காலத்தில் இணையர் நந்தினி முருகவேள் அவர்களின் தலைமையில் சிறிய குழுக்களாக இக்கலந்துரையாடல் இடம்பெறும்.
இணையர் நந்தினிமுருகவேள் அவர்களின் உதவியின்றி எம்மால் இக்கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியாது,
எனவே அவரைக் கௌரவித்து எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Bern Prosenectute அமைப்பில் வயோதிபர்களுக்க பொறுப்பதிகாரியான Frau Anna Hilsbrunner வருகை தந்துள்ளனர்.
இணையர்நந்தினி முருகவேள் எங்களுடன் (Caritas, Pro Senectute;, Rotes Kreuz) இணைந்து தொடர்ந்தும் இச்சேவையை ஆற்றிவருவார்.
அவரது சேவையைப்பாராட்டி அவரைக் கௌரவித்து, நன்றியையும் தெரிவித்துள்ளார். இக்கலந்துரையாடலின் போது புகைப்படங்களை எடுத்து அவர்களுக்கு வழங்கிய சந்திரமோகன் செங்கரன் அவர்களுக்கு நன்றியைத் கூறியுள்ளனர்.