வஸ்கடுவ பிரதேசத்தில் வாகன விபத்தை ஏற்படுத்தி சிற்றூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் காவற்துறை கைது செய்துள்ளது விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற நபரை அல்லவென உயிரிழந்த நபரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காலி – கொழும்பு பிரதான வீதியில் வஸ்கடுவ பிரதேசத்தில் கடந்த மாதம் 13 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி ஊடாக பயணித்த நபர் மீது அதிவேகத்தில் வந்த சிற்றூர்தி ஒன்று மோதிய விதம் சி.சி.டி.வி கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.