கோமாதாக்களின் கொலைக்களமாக மாறும் புங்குடுதீவு மண்: தடுத்து நிறுத்தக் கோரி கண்டனப் பேரணி (படங்கள், காணொளி இணைப்பு)

பசுக்களின் கொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணியொன்று புங்குடுதீவு பிரதேச சபை முன்றலில்  ஆரம்பமாகியுள்ளது.

ஊரதீவு கிராம மாடுகள் கட்டிவைக்கப்பட்ட சுலோச்சனா அம்மாவின் காணிக்குள் உள்ள பாழடைந்த கிணற்றில் மாடு ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து இன்றைய தினம் கண்டனப் பேரணியொன்று ஆரம்பமாகியுள்ளது.

பசுக்களின் கொலைக்களமாக புங்குடுதீவு மாறி வருகின்றது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மேற்படி சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் எனவும் கோரியே இந்த கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.