பூனை வளர்ப்பது உங்களுக்கு பிடிக்குமா? உங்கள் செல்லப்பிராணியின் மீது அதீத அன்பு இருக்கிறதா? அப்படியென்றால் உங்களுக்கு பூனையை பற்றிய இந்த 10 விஷயங்கள் தெரியுமா?
- சராசரியாக பூனைகள் ஒரு நாளில் 70 சதவீதத்தை தூங்கியே கழிக்கின்றன.
- பொதுவாக பூனைகள், ஒரு உணவை மூன்று முறை ருசித்து சோதனை பார்த்த பின் நான்காவது முறை நம்பிக்கையுடன் அதனை உண்ணும்.
- பூனைகள் தனது உள்ளங்கால் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றன.
- அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
- பூனைகளால் இனிப்பு பொருட்களை ருசிக்க முடியாது.
- பெண் பூனைகள் பொதுவாக வலது கால் பழக்கமுடையவை. மேலும் ஆண் பூனை இடது கால் பழக்கம் கொண்டவையாக இருக்கும்.
- பூனைகளுக்கு காலர் எலும்புகள் என்று சொல்லக்கூடிய கழுத்திற்கும் தோலுக்கும் இடையேயான எலும்புகள் கிடையாத
- பெண் பூனைகள் மோலி அல்லது ராணி என்று அழைக்கபடும்.
- பூனைகளால் கடல் நீரை குடிக்க முடியும். அதன் சிறுநீரகங்கள் உப்பை வடிகட்டும் அளவிற்கு திறன் கொண்டவை.
- பாலூட்டிகள் மற்றும் பறவைகளைச் சேர்ந்த 33 இனம் பூனைகளால் அழிந்துள்ளது. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று.