வோல்டர் ஜெயோ, பிறித்தானிய போர் வீரராக முதலாம் உலக யுத்தத்தில் பங்கேற்ற நபர்.
யுத்தத்தின் போது 1916 ஆம் ஆண்டு அவரது முகம் பாதிப்புக்குள்ளாகி சிதைந்து போனது.
கண்கள் மூக்கின் மேற்பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் ஹோர்லன்ட் கியிஸ் என்பவரால் பொறுப்பேற்கப்பட்டார்.
பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படும் ஹோர்ல்ட் அந்த கால கட்டத்தில் தான் “பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை” இக்கு என தனி மருத்துவ பிரிவை ஆரம்பித்திருந்தார்.
1917 ஆம் ஆண்டு, வோல்டரின் பாதிப்புறாத ஏனைய உடல் பகுதிகளில் இருந்து தசைகள் எடுக்கப்பட்டு முகத்தில் பொருத்தப்பட்டு சிகிச்சை ஆரம்பமானது.
ஆரம்ப கட்டம் என்பதால் பலருக்கு சிகிச்சைகள் தவறிப்போயின. ஆனால், வோல்டரின் சிகிச்சை கச்சிதமாக நிறைவேறியது. புதிய முகத்தோற்றம் அவருக்கு கிடைத்தது!
உலகின் முதலாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையாக இது உத்தியோக பூர்வமாக ஏற்று கொல்லப்பட்டுள்ளது.